சமீபகாலமாகவே ஒரு பிராண்ட்களை மற்ற பிராண்ட்கள் சரியில்லை என்று டிவியில் தாக்குவது பெருகிவருகிறது.
தற்போது `டைடு' பிராண்டை தாக்கும், இந்துஸ்தான் னிலீவர் நிறுவனத்தின் (எச்..எல்) ரின் சோப்புத் தூள் விளம்பரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ...
அண்மையில், எச்..எல். நிறுவனம் அதன் ரின் சோப்புத் தூள் குறித்த விளம்பரம் ஒன்றை நாடு முழுவதுமாக பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியிட்டது. தமிழ்நாட்டிலும் முன்னணி டி.வி. சேனல்களில் இந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. புராக்டர் அண்டு கேம்பிள் (பி-ஜி) நிறுவனத்தின் டைடு பிராண்டு சலவைத் தூளை விட ரின் சோப்புத் தூளே சிறந்தது என்பது போல் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதனால் சர்ச்சை ஏற்பட்டது. எச்..எல். நிறுவனத்தை எதிர்த்து பி-ஜி நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்று விட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. எனவே, இந்த விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டி.வி.க்களில் இந்த விளம்பரம் தொடர்ந்து ஒருவாரமாக ஒளிபரப்பானது. வியப்பூட்டும் வகையில் இந்த விளம்பரம், முன்பை விட அதிகமாக அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.
சென்ற வெள்ளிக்கிழமை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இதற்கு தடை செயய இடைக்கால ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதனையடுத்து விளம்பரம் நிறுத்தப்பட்டது. "நீதிமன்றம் எமதுநிறுவனத்தின் கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என பி-ஜி இந்தியாவின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) சுமித் வோஹ்ரா தெரிவித்தார்.
`டைடு நேச்சுரல்ஸ்' சோப்புத் தூளில் இயற்கையான முறையில் எலுமிச்சை மற்றும் சந்தன மணம் அடங்கியுள்ளது என்று கூறப்பட்டதால் பி-ஜி நிறுவனத்துக்கு எதிராக எச்..எல். நிறுவனமே முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்பொருள் துறையைச் சேர்ந்த எச்..எல். மற்றும் பி-ஜி ஆகிய இரண்டுமே பன்னாட்டு நிறுவனங்களாகும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...