Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தாரை வாழவைத்து இருப்போரை ஓடவைக்கிறதா தமிழகம்?

E-mail Print PDF
தமிழகத்தில் தொழில்துவங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறை .
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்தில் தொழில் தொடங்க போட்டி"
வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதால் லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
தினிசரி நாளிதழ்களிலும், தொலைகாட்சிகளிலும் முக்கிய செய்திகளாக இடம்பெறுகின்றன இத்தகவல்கள்.

நாள்தோறும் வேலையை  தேடி அலையும் தினசரியை பார்க்கும் ஒரு நபர் மேற்கண்ட செய்தியை படித்தவுடன் ஒரு பூஸ்ட் குடித்த உணர்வுதான்.ஏனெனில்  அவர்களுக்கு மிக சந்தோஷமான தகவல். அதிலாவது நமக்கு வேலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சி.

இப்படி கோடி கோடியாக தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களை வரவேற்கும் தமிழகம் தான் பிறந்த ஊரில் ஒருவன் பரம்பரை தொழில் கூட செய்யமுடியாமல் தெருகோடியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை அறியாதது வியப்புக்குரியது.

கோடிகளில்  தன் தொழிலை தொடங்க வரும் நிறுவனங்களுக்கும், அவற்றுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும், மானியங்களும் அளித்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது நம்  மாநில அரசு. ஆனால் , அதே போன்ற தொழில்களை சிறய ஆளவில் செய்யும் சிறுதொழில் முனைவோர்களுக்கும் வழங்குகிறதா என்று பார்த்தால் மிக குறைவு .  ஒரு சிறு தொழில்முனைவோர்      தொழில் ஆரம்பிக்க நினைத்தால் வரும் ப்ரச்னைகள் தாராளம்.

சிறு நிறுவனங்கள் அவர்கள் நிறுவனத்தினை முறையாக பதிவு செய்ய மாவட்ட தொழில்மையங்களை அனுகினால் அங்கே  அவர்கள் சொல்லும் கட்டுப்பாடுகளில் தலைச்சுற்றி கீழே விழவைத்துவிடும். சிறு தொழில்களுக்கு மட்டும் ஏன் என்ற இந்த நிலைமை  என்பது இன்னமும் ? தான்.
அப்படியே நிறுவனத்தினை பதிவுசெய்தபின் வாட்/டின் எண்களை பெற முனைந்தால் அந்த கொடுமை அதை விட பெரிதாக இருக்கிறது அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட மூன்றுகளின் மடங்குகளில் கட்டணம். ஏன் என் இந்த நிலைமை.? கோடிகளில் செய்யும் தொழில்தான் வெற்றிபெறுமா? மூளையை மூலதனமாக வைத்து தொழில் செய்வோர் மூலையில்தான் அமரவேண்டுமா?

ஆரம்பமே அதிசோதனை என்றால் அடுத்தடுத்து அரசாங்கங்கள் நிர்ணயிக்கும் கட்டுப்பாடுகளும்தான் எத்தனை சோதனை.
தொழில் தொடங்க கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் கடினமான கட்டுப்பாடுகள்  அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். அல்லது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சரியான முறையில் வழிகாட்டிட ஓர் வழிகாட்டியாவது இருக்கலாமே!.

பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது பெரிய நிறுவனங்களோ தொழில் தொடங்க முன்வரும்போது அவர்களுக்கு உதவ அரசே நேரடியாக களம் இறங்கி தனிகுழுவை அமைக்கும்போது  நம் மண்ணில் இருந்து தொழில் தொடங்கவரும் முனைவோர்களை அரசாங்கம் ஏன் ஊக்களிக்க மறுக்கிறது?

வெளிநாட்டு நிறுவனங்களை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று போட்டிபோட்டிக்கொண்டு சொல்லும் அரசியல் தலைவர்கள் உள்ளூர் தொழில்முனைவோர்களை  ஊக்கப்படுத்த நாங்கள் இன்னது செய்திருக்கின்றோம் என்று போட்டிப்போடுவார்களா?

காலம்தான் பதில் சொல்லவேண்டும்....

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Tuesday, 06 April 2010 16:44 )  

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED