ய்யாபியாட்லயாகுட் ஐஸ்லாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும். இதன் பனிக்கவிகை ஒரு எரிமலையை மூடியுள்ளது.
பனியாறு என்றால் என்ன...பனியாறு என்பது மிக மிக மெதுவாக ஓடும் (நகரும்) பனிக்கட்டி ஆறு ஆகும். இதனைப் பனிப் பையாறு என்றும் கூறலாம் (பைய = மெதுவாக). இறுகிய பனிப்படைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் இப் பனியாறுகள் உருவாகின்றன. புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர் இருப்பு பனியாறுகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர் அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர் பனியாறுகளாகவே உள்ளன. துருவப் பகுதிகளில் பெருமளவு பரப்பு பனியாறுகளால் மூடப்பட்டிருக்க, வெப்பவலயப் பகுதிகளிலோ இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
பூமியில் இருக்கும் பனியாறுகள் சில
பெரிட்டோ மொரேனோ பனியாறு, பட்டகோனியா, ஆர்ஜென்டீனா
கிறீன்லாந்தின் கேப் யார்க்கில், பனிமலைகள் பனியாறுகளாகின்றன.
சுவிஸிலும் ஓடும் பனியாறு
அலேட்ச் பனியாறு, சுவிட்சர்லாந்து
இந்தப்பனியாறை மூடியுள்ள எரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது.
100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்ட பனியாறின் உள்ள எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும்.
அழகான இந்தப்பனியாறையின் எரிமலை வெடித்து சிதறுவதை பாருங்கள்... 
எரிமலை புகைக்கும் விமானங்களை தடை செய்தமைக்கும் காரணங்கள் என்ன...

டர்பைன் வேன்ஸ் (turbine vanes) என்கிற பாகம் தான் விமானத்தை செலுத்தும் ப்ரப்பலருக்குச் செல்லும் காற்று விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த டர்பைன் வேன்ஸில் உருகிய இக்னீசியஸ் பாறைகள் ஒட்டிக்கொண்டு இன்ஜினை சுத்தமாக நிறுத்திவிடும்.குறைந்த அளவில் இந்த எரிமலைப் புகை விமானத்தின் மின் சக்தியை பாதித்து விமான கட்டுப்பாட்டுத் தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருக்கிறது. எரிமலைப்புகை மேகத்தை சாதாரண மேகம் தான் என்று நினைத்து உள்ளே சென்றுவிட்ட பிறகு பார்வை கடுமையாகப் பாதிப்படைந்து விமானிகள் விமானத்தின் வழித்தடத்தை சரியாக கணிக்க இயலாமலும் போய்விடும்.
சில சம்பவங்கள்:
1. 1980இல் 727 மற்றும் DC-8 விமானங்கள் தனித்தனியாக வாஷிங்டனில் இருக்கும் செயின் ஹெலன் எரிமலையிலிருந்து வந்த புகையில் மாட்டிக்கொண்டன. விமானத்தின் முன் கண்ணாடி உடைந்து போனது. இரண்டு விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கின.
2.1982 இல் இந்தோனேசியாவில் இருக்கும் Galunggung என்கிற எரிமலைப்புகையில் பல 747கள் சிக்கிக்கொண்டன. கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் நான்கு என்ஜின்கள் செயலிழந்து விட்டன. 36000 அடியிலிருந்து 12500 அடிவரை திடுமென கீழிறங்கிய அந்த விமானத்தின் இன்ஜின் பிறகு முழித்துக்கொண்டது. என்ஜின் பழுதடைந்தாலும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது அந்த விமானம்.
3.1989இல் புத்தம்புதிய 747-400 Anchorageஇல் இருக்கும் Mt.Redoubtஇன் புகையில் சிக்கிக்கொண்டது. புகை என்ஜினுக்குள் சென்றவுடன் புகையாக மாறினாலும் விமானம் பாதுகாப்பாக Anchorageஇல் தரையிறங்கியது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
-
|117.254.138.xxx |2010-04-26 11:11:27 நிஷாதங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன்.
மனமார்ந்த நன்றிகள் திரு சுப்ரமணியன்.
-
|110.172.152.xxx |2010-04-24 14:48:29 தினா - நல்ல கட்டுரைபயனுள்ள கட்டுரை வழங்கியமைக்கு நன்றிகள் பல.

-
|117.254.135.xxx |2010-04-24 09:11:08 வெ.சுப்பிரமணியன்ஓம்
இயற்கையின் சீற்றம் மனிதனுக்கு ஒரு சவால்.எரிமலை
மழை பொய்தல், அதிகமாகப் பெய்தல், சுனாமிப் பேராழியலைகள் , கடற்கோள், நில நடுக்கம், சூறாவளி, புயல், காற்றழுத்த வேறுபாடு, புவி வெப்ப மயமாதல், போன்றவை மனிதன் விலங்குகள், பொருள்கள் முதலியவற்றை அழித்தும், இடம் பெயர்த்தும் புதிய துன்பங்கள் தருவன. ஒவ்வொன்றும் புதிய பரிமாணத்தில் வெவ்வேறு தீமைகளைத் தாங்கி வருகின்றன. அவற்றின் இடையூறுகளையும் சேதாரங்களையும் களைய மனித்ன் போராடி வருகிறான்.
எரிமலைபற்றிய கற்குழம்பு, புகை மண்டலம் , பனியாறு போன்ற் அரிய் தகவல்கள் கொண்ட நல்ல பதிவு. நன்றி
ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம்
-
|117.254.135.xxx |2010-04-24 09:10:12 வெ.சுப்பிரமணியன்ஓம்.
இயற்கையின் சீற்றம் ஒரு பெரும் ஆபத்தைக் கொண்டது. ஒவ்வொரு இழப்பும் மனிதனின் கவனத்தை ஈர்த்து அதன் கேடுகளினின்றும் மீள்வதற்கு வகைசெய்யும் புதிய வடிகால்கள் தோன்றவேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் உருவாகுகின்றன. மழை பெய்தும் பொய்த்தும் சீர்கேடு வருகின்றது. கடற்கோள், சுனாமி, சூறாவளி வெப்பமயமாதல் போன்றவை மனிதனை மிகவும் பயமுறுத்திவருகின்றன.
எரிமலையின் தற்சமய நிகழ்வுபற்றிய நல்ல பதிவு. ஆசிரியருக்கு நன்றி.
வெ.சுப்பிரமணியன் ஓம்
-
|117.254.135.xxx |2010-04-24 09:09:43 சுந்தர், ஜோர்டான்நல்ல பயனுள்ள தகவல்கள். பதிவாளருக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்,
சுந்தர்
-
|117.254.138.xxx |2010-04-23 14:52:38 மகேஷ் - அருமையான / பயன்தரும் தகவல்ஸ்விஸ் நிஷா அவர்கள் இந்தக் கட்டுரையை மிகவும் பயன்தரும் அளவில் அருமையான முறையில் அளித்திருக்கிறார், மிக்க நன்றி.
இது போன்ற தகவல்களை, தெளிவுபடுத்தும் நோக்குடன் கொடுக்கும்பட்சத்தில் நம்முடைய தமிழ் மக்களின் அறிவுத்திறனும், விழிப்புணர்வு மற்றும் உலக அளவில் போட்டியிடும் தகுதி ஆகியவை கூடும் என்று நம்புகிறேன்.
பாராட்டுக்கள் தமிழ்வணிகம்.காம்
--
மகேஷ்
அட்லாண்டா, அமெரிக்கா






தொடர்ந்தும் என்னை வழி நடத்துங்கள்.....
அன்போடு
சுவிஸ்
நிஷா