
யுவா, சென்னை
டிரேடிங் (Trading) என்றால் என்ன ?
டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது - விற்பது அல்லது விற்பது - வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.
டிரேடிங் (அ) பங்குவர்த்தகம் இரண்டு வழிகளில் நடை பெறுகிறது. ஒன்று பங்குத்தரகரிடம் சென்று பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ செய்வது, இரண்டாவது முறை ஆன்லைன் வர்த்தகம்
பங்குத்தரகரிடம் செய்யும் பங்கு வர்த்தகம்:
இந்த முறையில் பங்குகளை வாங்கவே அல்லது விற்கவே, முதலில் பங்குத்தரகரை அனுக வேண்டும்.அவர் நமக்காக பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ செய்வார். இவ்வாறு செய்ததின் அடையாளமாக ஒரு டாக்குமெண்டை நம் கையில் கொடுப்பார், அதுதான் நமக்கு ஆதாரம். அடுத்த முறை பங்கு வர்த்தகம் செய்ய அவரிடம் செல்லும் போது அதை கொண்டு செல்ல வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகம் (Online Account):
இந்த முறையில் வர்த்தகம் செய்ய முதலில் நீங்கள் டிமேட்(Demat Account) எனும் அக்கவுண்ட் தொடங்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வர்த்தகம் செய்ய தொடங்கலாம், இதற்காக நீங்கள் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் இந்த முறையில் பேப்பர் அல்லது டாக்குமென்ட் எதும் அவசியம் இல்லை.
டிரேடிங் வகைகள் யாவை ?
டிரேடிங் இரு வகைப்படும்.
1.கேஷ் ஆர்டர்
இதில் நீங்கள் பங்குகளை வாங்குவதற்க்கு ஆர்டர் செய்து அவற்றை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம் அல்லது ( square it off ) எனப்படுகிற முறையில் உங்கள் கணக்கில் உள்ள பங்குகள் தானியங்கி முறையில் சுழியாக்கப்பட்டுவிடும் ( அதாவது நீங்கள் பங்குகளை வாங்கியிருந்தால் விற்றுவிடுவது, நீங்கள் விற்று இருந்தால் வாங்கிவிடுவது)
2.மார்கெய்ன் ஆர்டர்
இது இன்டர் டே எனப்படுகிற வகையை சார்ந்தது. இதில் அண்றை தின முடிவில் ( square it off ) எனப்படுகிற முறையில் உங்கள் கணக்கில் உள்ள பங்குகள் தானியங்கி முறையில் சுழியாக்கப்பட்டுவிடும் ( அதாவது நீங்கள் பங்குகளை வாங்கியிருந்தால் விற்றுவிடுவது, நீங்கள் விற்று இருந்தால் வாங்கிவிடுவது)
டிவிடன்ட் பெற குறைந்தபட்ச நாட்கள்?
டிவிடன்ட் பெற குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது பங்குகள் உங்கள் டிமேட் கணக்கில் இருக்க வேண்டும்.அதாவ்து நீங்கள் பங்கை வாங்க ஆர்டர் செய்தபிறகு அது உங்கள் கணக்கில் வந்து சேர ஆகும் நாட்கள்.
டிவிடன்ட் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து குறைந்தது இரு நாட்களுக்கு முன்பாக நீங்கள் அந்த பங்கை ஆர்டர் செய்திருக்க வேண்டும்.அப்போதுதான் டிவிடண்ட் அறிவிக்கப்பட்ட தேதியில் பங்கு உங்கள் கணக்கில் இருக்கும். உங்களுக்கும் டிவிடண்ட் வந்து சேரும்.
தற்சமயம் நீங்கள் பங்குகளை விற்று இருந்தாலும், டிவிடண்ட் அறிவிக்கப்பட்ட தேதியில் பங்கு உங்கள் வசம் இருந்தால் உங்களுக்குத்தான் டிவிடண்ட் கிடைக்கும்.
மார்ஜின் டிரேடிங்
மார்ஜின் டிரேடிங் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் பியுச்சர் மார்கெட் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்.இதற்கு வர்த்தகம் பிரிவில் உள்ள "பியச்சர் மார்கெட்" என்னும் தலைப்பின் கீழ் உள்ளதை படிக்கவும்.
மார்ஜின் டிரேடிங் என்பது பொதுவாக போதிய அளவு பணம் இல்லாமல் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது ஆகும்.
இந்த டிரேடிங் பெரும்பாலும் பியுச்சர் மார்கெட்டில் நடைபெறும்.இவ்வகையான டிரேடிங்கில்
குறிப்பிட்ட அளவு பணம் வர்த்தகம் செய்பவரும், மீதம் உள்ள தொகையை தரகரும்(Broker) கொடுக்க வேண்டும். இந்த தொகையின் சதவீகிதம் தரகருக்கும், வர்கத்தகம் செய்பவருக்கும் உள்ள உறவை பொறுத்தது.
மார்ஜின் டிரேடிங்கில் நீங்கள் வாங்கிய பங்கின் விலை, வாங்கிய விலைக்கும் கீழே குறையும் போது, தரகர் உங்களிடம் கணக்கில் பணத்தினை வரவு வைக்கச்சொல்வார். அவ்வாறு வைக்க நீங்கள் தவறினால், அவரே பங்குகளை விற்று, அவர் பங்கு போக மீதமுள்ள தொகையை நம்மிடம் கொடுத்து விடுவார்
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





