Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடன் : மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 20,000 கோடி

E-mail Print PDF
பொருளாதார நெருக்கடியால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன்  காரணமாக பங்குசந்தைகளிலும், மியூச்சுவல் பண்ட்களிலும் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர். இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை கடும் நிதி நெருக்கடி ஏற்படும். இந் ெருக்கடியை சமாளிக்க ரூ.20,000 கோடி யை 9 சதவீத வட்டியுடன் கடன் அளிக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.
சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, பங்குச் சந்தை கடந்த வாரம் வரை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக பங்குச் சந்தையுடன் நேரடி தொடர்புள்ள மியூச்சுவல் பண்ட் முதலீடுகளின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) மளமளவென சரிந்தன.
பங்கு முதலீட்டாளர்களைப் போலவே, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கும் இந்த சரிவு பீதி ஏற்படுத்தியது. மேலும், தங்கள் முதலீடு குறைந்து நஷ்டம் அதிகமாவதைத் தவிர்க்க, மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை ஏராளமானோர் திரும்பக் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான முதலீட்டாளர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்கத் தொடங்கியதால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
அவற்றுக்கு கைகொடுக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
அதன்படி, 14 நாட்களுக்கான குறுகிய காலக் கடனாக ஆண்டு வட்டி 9 சதவீதத்தில் வங்கிகள் மூலம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்காக ரூ.20,000 கோடி வெளியிடுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தொகையைக் கொண்டு யூடிஐ மியூச்சுவல் பண்ட், எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட், ஐசிஐசிஐ புரூடென்சியல் மியூச்சுவல் பண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு வங்கிகள் குறுகிய காலக் கடன் வழங்கும்.
எனவே, முதலீட்டைத் திரும்பப் பெற விரும்பும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு எந்த சிரமமும் இன்றி பணம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED