இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு விதிகளை , அன்னிய முதலீடுகள் இந்தியாவில் நுழைவதற்கான விதிகளை தளர்த்தவும் செபி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அன்னிய நிதிநிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்ய விதிகளைத் தளர்த்துவது அவசியம் என செபி கருதுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கான முதலீட்டுத் திட்டங்களுக்கு கால வரம்பு ஒரே மாதிரியாக அமைய வேண்டும் செபி நினைக்கிறது. ஆனால் நிதிநிறுவனங்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக வில்லை. 6 மாதங்கள் போதும் என்று சில நிதிநிறுவனங்கள் கூறுகின்றன. சில நிதிநிறுவனங்கள் இந்த அவகாசம் ஒரு வருடமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
அத்துடன் குறிப்பிட்ட காலத்துக்கான திட்டத்தில் (பிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம்) முதலீடு செய்தவர்கள் இடையில் முதலீட்டை விலக்கிக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்று நிதிநிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
இக்கருத்தை செபி ஏற்றுக்கொண்டாலும் முதலீட்டை விலக்கிக் கொள்ள மாற்று வழியாவது உருவாக்கித் தரவேண்டும் என விரும்புகிறது. குறிப்பிட்ட காலத்துக்கான முதலீட்டுத் திட்டங்களை பங்குச் சந்தையில் பதிவு செய்தால், வெளியேற விரும்புகிறவர் தங்கள் பங்குகளை விற்றுவிடலாம் என செபி கருதுகிறது. எல்லா நிதிநிறுவனங்களும் தங்கள் முதலீட்டுத் திட்டங்களை தங்கள் இணைய தளங்களில் கட்டாயமாக வெளியிட வேண்டும் எனவும் செபி கூறுகிறது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...