AVIVA Insurance நிறுவனம் தற்போது பரஸ்பர நிதித் திட்டங்கள் (Mutual Fund) விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், சொத்து நிர்வாக வணிகத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் சிமோன் மஷெல் தெரிவித்தார்.
ஆசிய-பசிபிக் பிராந்திய விரிவாக்க நடவடிக்கையில் லாபம் தரும் தொழில்களில் ஈடுபட AVIVA முடிவு செய்துள்ளது. அந்த வரிசையில் பரஸ்பர நிதி, சொத்து நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார். இதற்காக பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது அல்லது இத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்கவும் அவிவா திட்டமிட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள 18 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் சொத்து நிர்வாக துறையிலும் ஈடுபட்டுள்ளன. ICICI Prudential, Reliance Mutual Fund, HDFC Mutual Fund மற்றும் SBI Mutual Fund ஆகியன தற்போது வணிகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்கள்.
தற்போது 34 நிறுவனங்கள் பரஸ்பர நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.
AVIVA Life Insurance இந்தியாவின் Dabur மற்றும் AVIVA இணைந்த கூட்டு நிறுவனம். அதன் மூலதனம் ரூ. 1,400 கோடி.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...