Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

5 புது மியூச்சுவல் பண்ட் விரைவில் தொடக்கம்

E-mail Print PDF
பங்குச் சந்தை மீண்டும் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பியதை அடுத்து, விரைவில் 5 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அனுமதி கேட்டு பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன் வரை பங்குச் சந்தை எதிர்பாராத தொடர் சரிவில் இருந்தது. 21,000 புள்ளிகளைத் தொட்ட பிறகு சென்செக்ஸ் மளமளவென சரிந்து 8,000 புள்ளிகளுக்கு வந்தது. எனவே, முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பங்கு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதனுடன் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பங்குச் சந்தை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சென்செக்ஸ் 6 மாதங்களில் 15,000த்தை தொட்டுள்ளது.
எனவே, மியூச்சுவல் பண்ட்களும் லாப பாதைக்கு திரும்பியுள்ளன. இதையடுத்து, புதிதாக மியூச்சுவல் பண்ட் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. மோதிலால் ஆஸ்வல், ஏஎஸ்கே இன்வெஸ்ட் மென்ட் ஹோல்டிங், ஆக்சிஸ் பாங்க், இண்டியாபுல்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா ஆகிய 5 நிறுவனங்கள், செபியின் முதல் கட்ட அனுமதி பெற்றுள்ளன.
விரைவில் அவை முழு அனுமதியுடன் செயல்படத் தொடங்கும். தவிர, மேலும் அரை டஜன் நிறுவனங்கள் செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED