தங்கம் முதலீடு 28% லாபம்

E-mail Print PDF
தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டில் பணம் போடுவதும் தற்போது நல்ல லாபத்தை அளித்து வருகிறது. சொத்து பெருக வழி செய்கிறது. கடந்த ஓராண்டில் தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்ட்கள் 28 சதவீத லாபம் அளித்துள்ளன. பங்குச் சந்தை, கடன் உட்பட மற்ற வகை முதலீடுகளுக்கான மியூச்சுவல் பண்ட்களில் கிடைத்த அதிகபட்ச லாப சராசரி 20 சதவீதம் மட்டுமே. அதிலும் மற்ற திட்டங்களில் லாபத்தின் அளவும் வேறுபடுகிறது.
ஆனால், தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி தொடங்கியதில் இருந்து பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. நிதி நெருக்கடியின் பாதிப்பு, பங்குச் சந்தையில் எதிரொலித்தது. ஆனால் தங்கத்தில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஓராண்டில் தங்கம் அள்ளித் தந்துள்ள 28 சதவீத லாபத்துடன் ஒப்பிடுகையில் வங்கி, நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்ட்களின் சராசரி லாபம் 18 சதவீதம். நடுத்தர, நீண்ட கால முதலீடு திட்டங்களில் லாபம் 13 சதவீதம். மாதாந்திர வருமான திட்ட லாபம் 12 சதவீதம்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED