IDBI வங்கியின் துணை நிறுவனமான IDBI Mutual Fund, Nifty Index Fund Unit என்ற மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது. இதில் இருந்து பெறப்படும் நிதி தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவில் உள்ள 22 வகை தொழில்களில் உள்ள 50 நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படும்.
தேசிய பங்குச் சந்தையின் மொத்த வர்த்தகத்தில், இந்த 50 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 60 விழுக்காடாக உள்ளது.
இந்த யூனிட்டின் விலை ரூ.10. இது அவ்வப்போது டிவிடெண்ட் வழங்குவது, டிவிடெண்டையும் மறு முதலீடு செய்வது என்ற இரண்டு முறைகளிலும் உள்ளது. இதில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்.
அத்துடன் மாதா மாதம், குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்யும் திட்டமும் உள்ளது. இதன்படி மாதத்திற்கு ரூ. 500 வீத்ம் 12 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.ஆயிரம் வீத்ம் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.1,500 வீதம் நான்கு தவணை முதலீடு செய்ய வேண்டும்.
மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டு, 1 வருடத்திற்குள் விற்பனை செய்தால், 1 விழுக்காடு கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





