இந்தியாவின் முன்னணி தனியார் துறை நிதியுதவி நிறுவனமான ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேசன் (ஹெச்டிஎப்சி) நிறுவனம், 2010ம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் மூ்னறாம் காலகட்டத்தில் நிகரலாபம் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஹெச்டிஎப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஹெச்டிஎப்சி, இந்த நிதியாண்டின் 3ம் காலகட்டத்தில் ரூ. 890.8 கோடி நிகரலாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் (ரூ. 671.2 கோடி) ஈட்டியதைவிட 32.7 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிதியாண்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் மொத்த வருமானம், 20.2 சதவீதம் அதிகரித்து ரூ. 3,321.1 கோடியாக உள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ. 2,762.2 கோடியாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





