பென்ச்மார்க் மியூசுவல் பண்ட் அனுமதி மறுப்பு : செபி
இந்திய பங்கு சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன பங்கான பென்ச்மார்க் மியூசுவல் பண்டை இந்திய பங்கு சந்தையில் அனுமதிக்க மறுத்துவிட்டது.
பென்ச்மார்க் பாலிசிகளை கோல்டுமேன் சாக்ஸ் பாலிசிகளாக மாற்றுவதற்கு செபி மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன். கடந்த 2001 ஆம் தொடங்கப்பட்ட பென்ச்மார்க் மியூசுவல் பண்ட் நிறுவனத்தை, கோல்டுமேன் சாக்ஸ் வாங்கியுள்ளது.2008ம் ஆண்டு இந்திய பங்கு சந்தைக்கு அனுமதி பெற்ற கோல்டுமேன் சாக்ஸ் , ரூ.3,000 கோடி மதிப்பிலான பென்ச்மார்க் நிறுவன பாலிசிகளை இந்த வருட இறுதிக்குள் வாங்கும் எனத் தெரிகிறது. இருப்பினும் முந்தைய பாலிசிதாரர்கள் பென்ச்மார்க் திட்டங்களிலேயே இருப்பார்.
இந்திய பங்கு சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன பங்கான பென்ச்மார்க் மியூசுவல் பண்டை இந்திய பங்கு சந்தையில் அனுமதிக்க மறுத்துவிட்டது.