Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடன் பத்திரம் மூலம் ரூ. 16,800 கோடி திரட்ட முடிவு : பி.எப்.சி

E-mail Print PDF

கடன் பத்திரம் மூலம் ரூ. 16,800 கோடி திரட்ட முடிவு : பி.எப்.சி
பொதுத் துறை நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.16,800 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
மின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைக்காக பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி) நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக, கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேற்கண்ட மொத்த நிதியில், 200 கோடி ரூபாயை திரட்டும் வகையில், இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் 29ம் தேதி, கடன் பத்திரங்களை வெளியிட்டது. பத்தாண்டுகளில் முதிர்வடையக்கூடிய கடன் பத்திரங்களுக்கு 8.50 சதவீத வட்டியும், 15 ஆண்டு காலத்திற்கான கடன் பத்திரங்களுக்கு 8.75 சதவீத வட்டியும் வழங்கப்படும்.
வரிச் சேமிப்பு மற்றும் வரிவிலக்குடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 11 ஆயிரத்து 900 கோடி ரூபாயும், நடுத்தர கால அடிப்படையிலான, சர்வதேச கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 4,900 கோடி ரூபாயும் திரட்டும் வகையில் ஒப்புதல் பெற்றுள்ளது என, இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஆர்.நாகராஜன் தெரிவித்தார்

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED