பாரதி ஏர்டெல் பங்குகள் மதிப்பு 2.3% சரிவு
நாட்டின் மிகப் பெரிய செல்போன் சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல் இன்று தனது பங்குகள் மதிப்பில் 2% சரிவை சந்தித்தது.
பாரதி ஏர்டெல்லில் கடந்த சனிக்கிழமை சிபிஜ ரெய்டு நடத்தியதே பங்கு மதிப்பு சரியக் காரணம் எனக் கூறப்படுகிறது. அலைக்கற்றை ஊழல் வழக்கிற்காக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களில் சிபிஜ ரெய்டு நடத்தியது. ஏர்டெல் தொடர்பான அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அனைத்தும் அரசின் விதிமுறைக்கு உட்பட்டே நடைபெற்றதாய் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 2.3% சரிவால் பாரதி ஏர்டெல் ஒரு பங்கின் மதிப்பு ரூ.388.50 ஆக இருந்தது. மொத்த சந்தையின் மதிப்பும் இன்று சற்று சரிந்தே காணப்பட்டது. சென்செக்ஸ் மதிப்பு 2.6% சரிந்து 15,946.10 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
நாட்டின் மிகப் பெரிய செல்போன் சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல் இன்று தனது பங்குகள் மதிப்பில் 2% சரிவை சந்தித்தது.





