ரூ.500 கோடி பாண்டுகள் மூலம் திரட்ட முடிவு : ஷெராய் இன்ஃப்ரா
உள்கட்டமைப்பு பங்குகளை ஜனவரி 2012ல் வெளியிடுவதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட ஷெராய் இன்ஃப்ரா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஷெராய் நிறுவன தலைவர் ஹேமந்த் கூறுகையில்,
கடந்த இரு வருடங்களாக பாண்டுகள் மூலம் வரிசேமிப்பு முறை அமலில் இருந்தாலும்,இதுவரை எங்கள் நிறுவனம் மூலம் எந்தவொரு உள்கட்டமைப்பு பாண்டுகளையும் வெளியிட்டதில்லை.
தற்போது வரும் புத்தாண்டு ஜனவரி முதலில் ரூ.500 கோடி மதிப்பிலான பாதுகாப்பான , திரும்பப் பெறக்கூடிய உள்கட்டமைப்பு பங்குகளை வெளியிடுகிறோம் என்றார்.
உள்கட்டமைப்பு பங்குகளை ஜனவரி 2012ல் வெளியிடுவதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட ஷெராய் இன்ஃப்ரா முடிவு செய்துள்ளது.