எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை வாங்கும் வர்கி குழுமம்
துபாயைச் சேர்ந்த வர்கி குழுமம் சென்னையைச் சேர்ந்த எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை ரூ.138.23 கோடிக்கு வாங்கியுள்ளது.
வர்கி குழுமம் 2.6 மில்லியன் பங்குகளை எவ்ரான் எஜுகேஷன் நிறுவனத்திடம் ஒரு பங்கு ரூ.528க்கு வாங்கியுள்ளது.
ஹெல்த்கேர், உள்கட்டமைப்பு, கல்வித் துறை பங்குகளில் கவனம் செலுத்தும் வர்கி குழுமம் ஏற்கனவே சிறிய அளவில் எவ்ரான் பங்குகளை வாங்கியிருந்தது. தற்போது வாங்கப்பட்டுள்ள 2,618,120 பங்குகளில் வர்கி குழுமத் தலைவர் சுன்னி வர்கி வசம் 2.65% பங்குகளும், வர்கி குழும உறவினர் ஷர்லி வசம் 2.87% பங்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாயைச் சேர்ந்த வர்கி குழுமம் சென்னையைச் சேர்ந்த எவ்ரான் எஜுகேஷனின் 12% பங்கை ரூ.138.23 கோடிக்கு வாங்கியுள்ளது.