இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளது. இதனால் தொடர்ச்சியாக சரிந்துவரும் பங்குச்சந்தையில் இந்த முதலீடு ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
2008-2009-ல் எல்ஐசி நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளது. பின்னர் 2009-10-ல் இதுவரை ரூ.40,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.60,000 கோடியையும் முதலீடு செய்ய உள்ளதாக அதன் வடக்கு பிராந்திய மேலாளர் வினய்குமார் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





