கடன்பத்திர கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து செபிக்கு மாற்றம் வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரெங்கராஜன் கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதன் வர்த்தகத்தையும் ரிசர்வ் வங்கியே கட்டுப்படுத்துகிறது.
சில தொழில் நிறுவனங்களும் கடன்பத்திரங்களை வெளியிட்டு முதலீடுகளை திரட்டுகின்றன. இதனை பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி கட்டுப்படுத்துகிறது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.ரெங்கராஜன் பேசும் போது, அரசு கடன் பத்திரங்களை மீதான கட்டுப்பாட்டை மாற்ற இயலாது என்று கூறமுடியாது. அரசு கடன் பத்திர மீதான வர்த்தகத்தை செபியின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும்.
ஆனால் பொருளாதார நிர்வாகத்தில், அந்நிய செலவாணி முக்கிய பங்கு வகிப்பதால், இதன் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கியே வைத்துக்கொள்ளவேண்டும். நிதி துறை, மற்ற துறைகளுக்கு ஆதரவானதாக இருக்க வேண்டும். ஒரு அளவுக்கு மேல் பொருளாதார துறையின் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, நல்லதல்ல என்றும் கூறினார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this