இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை, கடந்த வெள்ளிக்கிழமை அன்று 1.8 சதவீதம் அதிகரித்து ரூ.1,123.95-க்கு கைமாறியது.
இந்நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகையில் மேலும் நான்கு இடங்களில் இயற்கை எரிவாயு வளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாவும், இதில் வர்த்தக ரீதியாக உற்பத்தி தொடங்க முடியும் என்றும் எண்ணெய் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த அட்லாஸ் எனர்ஜி நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை 170 கோடி டாலருக்கு (ரூ.7,558 கோடி) வாங்கப் போவதாக அறிவித்துள்ளது. அட்லாஸ் எனர்ஜி நிறுவனம், `சேள்' எனப்படும் மென்பாறை பகுதியிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வழிமுறை வாயிலாக இயற்கை எரிவாயு தயாரிப்பதில் மாபெரும் வளர்ச்சி ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளுக்கு அதிக அளவில் விற்பனையாகின.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





