அமெரிக்க பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவே காணப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 950 புள்ளிகளை டவ் ஜோன்ஸ் வர்த்தகம் இழந்துள்ளது. டவ் ஜோன்ஸ் வர்த்தகத்தில் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சிப்பாதையில் சென்றது. நேற்று 444.99 புள்ளிகள் இழந்து 7552.29 புள்ளிகளாக முடிவடைந்தது. நாஸ்டாக் வர்த்தகத்திலும் 70.30 புள்ளிகள் இழந்து 1316.12 புள்ளிகளாக குறைந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களில் 850க்கும் அதிகமான புள்ளிகளை டவ் ஜோன்ஸ் வர்த்தகம் இழந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தை தொடக்கத்தில் இன்று ஏற்ற இறக்க நிலை காணப்பட்டது. டோக்கியோ சந்தையில் 170 புள்ளிகள் வீழ்ச்சியும் ஹாங்காங் பங்குச்சந்தையில் 350க்கும் அதிகமான புள்ளிகள் வீழ்ச்சியுடனும் காணப்பட்டது. தைவான் சந்தையில் 100க்கும் அதிகமான புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருந்தது. ஹாங்காங் சந்தையில் 4 நாட்களில் 1300 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச சந்தையின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து 7 நாட்கள் சரிந்துள்ள இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
| Comments |
|















மியூச்சுவல் சொத்து 6 லட்சம் கோடி
சில மியூச்சுவல் நிறுவங்கள் இந்த பங்...
உள்ளூர் காசோலைக்கு ஒரே நாளில் பணம் : ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கி இன்னும் நிறைய மாற்றங்...
உள்ளூர் காசோலைக்கு ஒரே நாளில் பணம் : ரிசர்வ் வங்கி!
நல்ல தகவல் நன்றி
"பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி
பத்ரியின் வலைத்தளத்தை தவறாமல் படிப...
"பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி
ஊக்கப்படுத்திய அனைவருக்கம் எங்களத...