ஒரு வார வீழ்ச்சிக்குப்பின்னர் இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் தொடக்கத்தில் முன்னேற்றம் காணப்படுட்டது. ஆசிய பங்குச்சந்தைகள் தொடக்கத்தில் வீழ்ச்சியில் சென்றிருந்தாலும் பின்னர் முன்னேற்றப்பாதையில் காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் 160 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை தொடக்கத்தில் 50புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை பலத்த சரிவுடன் தொடங்கிய ஹாங்காங் சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆசிய பங்குச்சந்தையில் ஏற்றம் நிலவுவதால் இந்திய பங்குச்சந்தையும் முன்னேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
11:00 மணியளவில் மும்பை சந்தையில் 293 புள்ளிகள் முன்னேறியும், தேசிய சந்தையில் 81.35 புள்ளிகள் முன்னேறியும் காணப்பட்டது. பெல், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தன.
12:00 மணியளவில் மும்பை சந்தையில் 319 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. தேசிய சந்தையில் 94 புள்ளிகள் அதிகரித்திருந்தது.
1:00 மணியளவில் மும்பை சந்தையில் 220 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. தேசிய சந்தையில் 59 புள்ளிகள் அதிகரித்திருந்தது.
2.30: மணீயளவில் மும்பை வர்த்தகம் 260 புள்ளிகளும், தேசிய வர்த்தகம் 81 புள்ளிகளும் அதிகரித்திருந்தது. டிஎல்எப் 10%, டாடா பவர் 5%, டாடா கம்யூனிக்கேசன் 3% வீழ்ச்சியும், கண்டிருந்தன.
3:30 மணியளவில் பங்கு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை சந்தையில் 523 புள்ளிகளும் தேசிய சந்தையில் 159 புள்ளிகளும் அதிகரித்திருந்தன.
தேசிய பங்குச்சந்தை 2700 புள்ளிகளையும் மும்பை சந்தை 8900 புள்ளிகளையும் தான்டி சென்றது. ரிலையன்ஸ் கம்யூனிக்கேசன் 17%, ரிலையன்ஸ் இன்ஃப்ரா 17%, எஸ்பிஐ, ஸ்ட்ரெர்லைட் இந்தியா 9%க்கும் அதிகமான புள்ளிகள் முன்னேற்றம் கண்டிருந்தன.
இன்றைய முடிவில் பங்கு வர்த்தக புள்ளி நிலவரம்
மும்பை சந்தை 8915.21 464.20 அதிகரிப்பு
தேசிய சந்தை 2693.45 140.30 அதிகரிப்பு
ஒரு வாரகாலகட்டத்திற்கு பிறகு பங்கு வர்த்தகம் இன்று நல்ல முன்னேற்றத்துடன் முடிந்துள்ளது.
| Comments |
|















மியூச்சுவல் சொத்து 6 லட்சம் கோடி
சில மியூச்சுவல் நிறுவங்கள் இந்த பங்...
உள்ளூர் காசோலைக்கு ஒரே நாளில் பணம் : ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கி இன்னும் நிறைய மாற்றங்...
உள்ளூர் காசோலைக்கு ஒரே நாளில் பணம் : ரிசர்வ் வங்கி!
நல்ல தகவல் நன்றி
"பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி
பத்ரியின் வலைத்தளத்தை தவறாமல் படிப...
"பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி
ஊக்கப்படுத்திய அனைவருக்கம் எங்களத...